ஆசையாகினேன் கோவே - Aasaiyaakinean Kovae

 ஆசையாகினேன் கோவே - Aasaiyaakinean Kovae


பல்லவி


            ஆசையாகினேன், கோவே-உமக்

            கனந்த ஸ்தோத்திரம், தேவே!


அனுபல்லவி


            இயேசுகிறிஸ்து மாசத்துவத்து ரட்சகா, ஒரே தட்சகா! -ஆசை


1.வேதா, ஞானப் பர்த்தா,-என்-தாதா, நீயே கர்த்தா;

மா தாரகம் நீ என்றே, பரமானந்தா, சச்சிதானந்தா. - ஆசை


2.கானான் நாட்டுக் கரசே,-உயர்-வான் நாட்டார் தொழும் சிரசே,

நானாட்ட முடன் தேடித், தேடி நாடிப், பதம் பாடி. - ஆசை


3.வீணாய் காலம் கழித்தேன்;-சற்றும்-தோணாமல் நின்று விழித்தேன்

காணா தாட்டைத் தேடிச் சுமந்த கருத்தே, எனைத் திருத்தே. - ஆசை


4.வந்தனம், வந்தனம், யோவா!-நீ-சந்ததம் சந்ததம் கா, வா,

விந்தையாய் உனைப் பணிந்தேன், சத்ய வேதா, இயேசு நாதா! - ஆசை


Aasaiyaakinean Kovae -Umakk

Kanantha Sthothiram Deve


Yesu Kiristhu Maasaththuvaththu Ratchaka, Orae Thatchaka - Aasai


1.Vedha Gnana Parththa En Thatha Neeyae Karththa

Maa Thaakaaram Nee Entre,Baramanantha Satchithanantha - - Aasai


2.Kanaan Naattu Karasae Uyar Vaan Naattaar Thozhum Sirasae

Naanaatta Mudan Theadi Theadi Naadi Patham Paadi - - Aasai


3.Veenaai Kaalam Kazhiththean; Sattrum Thonaamal Nintru Vizhththean

Kaanaa Thaattai Theadi Sumantha Karuththae Enai Thuththae - - Aasai


4.Vanthanam Vanthanam Yoova Nee Santhatham Santhatham Kaa vaa

Vinthaiyaai Unai paninthean Sathya Vedha Yesu Naatha - - Aasai





Post a Comment (0)
Previous Post Next Post