ஆதியாம் மகா ராஜனே - Aathiyaam Mahaa Raajanae

 ஆதியாம் மகா ராஜனே - Aathiyaam Mahaa Raajanae


பல்லவி


ஆதியாம் மகா ராஜனே - எந்த வேளையும்

அடியனோடிரும் ஈசனே


அனுபல்லவி


தீதில்லா சருவேசா தேசுறும் பிரகாசா

பாதகன் யான் மிகு பலவீனன் ஆனதால் - ஆதியாம்


1. பாவி பெலனால் ஐயனே - நின்றால் என்னைப்

பகைவர் ஜெயிப்பார் மெய்யனே;

தேவா துணை நீர் ஐயனே - சிறியனிடம்

சேர்ந்தே வசியும் துய்யனே

மேவும் தஞ்சம் எனக்கு வேண்டும் காவலன் நீரே;

சாவுவரையும் என்னைத் தாங்கி அரவணையும் - ஆதியாம்


2. இரக்கம் பொழிய வாருமே - கிருபையாக

இறைவா என்னிடம் சேருமே;

உருக்கம் நிறைந்த நீருமே - அனவரதம்

உந்தன் அருளைத் தாருமே;

செருக்காய் எம்மீ திகலோர் சேதம் செய்ய நினைக்கும்

திருக்கை அகற்றி என்னில் தினமும் அருள் புரியும் - ஆதியாம்


3. எந்தன் மரண மட்டுமே - அருகில் நீரே

இருந்தால் மகா இஷ்டமோ;

எந்த அகிதர் கெட்டுமே - இமைப் பொழுதில்

ஏகிப் போவார் திட்டமே;

தந்தை சுதன் நீரல்லால் தஞ்சம் வேறாரும் இல்லை

விந்தை மேவும் கதியில் மேன்மையுடன் வாழ்கவே - ஆதியாம்


Aathiyaam Mahaa Raajanae - Entha Vealaiyum

Adiyanodirum Eesanae


Theethillaa Saruveasaa Theasurum Pirakaasaa

Paathagan Yaan Migu Belaveenan Aanathaal


1.Paavi Belanaal Aiyamae Nintraal Ennai

Pagaivar Jeyippaar Meiyanae

Devaa Thunai Neer Aiyyanae Siriyanidam

Searnthae Vasiyum Thuiyyanae

Meavum Thanjam Enakku Vendum Kaavalan Neeare 

Saavu Varaiyum Ennai Thaangi Aravanaiyum 


2.Erakkam Pozhiya Vaarumae Kirubaiyaaga

Eraivaa Ennidam Searumae

Urukkam Nirantha Neerumae- Anavaratham

Unthan Arulai Thaarumae

Searukkaai Emmeethikalor seatham Seiyya Ninaikkum

Thirukkai Agattri Ennil Thinamum Arul puriyum


3.Enthan Marana Mattumae Arugil Neerae

Irunthaal Mahaa Istamo

Entha Agithar Keattumae Emai Pozhuthil

Yeagi Povaar Thittamae

Thanthai Suthan Neerallaal Thangam Vearaaum Illai

Vinthai Meavum Kathiyil Meanmaiyudan Vaalkavae 


ஆதியாம் மகா ராஜனே - Aathiyaam Mahaa Raajanae


Post a Comment (0)
Previous Post Next Post