எங்கே சுமந்து போகிறீர் - Engae Sumanthu Pogireer
எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்?
சரணங்கள்
1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உமது
அங்கம் முழுவதும் நோக ஐயா , என் யேசு நாதா -எங்கே
2. தோளில் பாரம் அழுத்த , தூக்கப் பெலம் இல்லாமல்
தாளும் தத்தளிக்கவே , தாப சோபம் உற நீர் -எங்கே
3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக ,
பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர -எங்கே
4. தாயார் அழுதுவர சார்ந்தவர் பின்தொடர
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பிவர - எங்கே
5. வல்லபேயைக் கொல்லவும் , மரணந்தனை வெல்லவும்
எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும் - எங்கே
6. மாசணுகாத சத்திய வாசகனே , உமது
தாசர்களைக் காக்கவும் தாங்காத சுமையை எடுத்து - எங்கே
7. வண்டக் கள்ளர் நடுவில் மரத்தில் தொங்குவதற்கோ
சண்டாளர்களைத் தூக்கும் தலையோட்டு மேட்டுக்கோ - எங்கே
Engae Sumanthu Pogireer Siluvaiyai Neer
Engae Sumanth Pogireer
1.Engae Sumanth Pogireer Intha Kaanalil Umathu
Angam Muluvathum Noga Aiyaa En Yeasu Naatha
2.Tholil Paaram Aluththa Thukka Belam Illaamal
Thaalum Thaththlikkavae Thaaba Sobam Ura Neer
3.Vaathaiyinaal Udalum Vaadi Thavippundaaga
Peatham Illa Seemonum Pinnaga Thaangivara
4.Thayaar Aluthu vara Saarnthavae Pin thodara
Maayam Illatha Gnana Maathar Pulambi Vara
5.Valla Peayaiyum Kollavum Maranaththanai Vellavum
Ellai Illa paavangal Ellaam Naadamagavum
6.Maasanukaatha Saththiya Vaasaganae Umathu
Thaasarkalai Kakkavum Thaangaatha Sumaiyai Eduththu
7.Vanda Kallar Naduvil Maraththil Thonguvatharko
Sandaalarkalai Thookkum Thalaiyottu Meattukko