எப்போதும் இயேசு நாதா - Eppothum Yeasu Naatha

 எப்போதும் இயேசு நாதா - Eppothum Yeasu Naatha


1.எப்போதும், இயேசு நாதா,

உம்மைப் பின்பற்றுவேன்

என்றே தீர்மானமாக

நான் வாக்குக் கொடுத்தேன்;

நீர் என்னைத் தாங்கிக் காப்பீர்

அப்போது அஞ்சிடேன்;

முன்சென்று பாதை காட்டும்,

நான் வழி தவறேன்.


2.பூலோக இன்பம், செல்வம்

வீண் ஆசாபாசத்தால்

என் ஆத்துமா மயங்காமல்

தெய்வீக பலத்தால்

நீர் துணைநின்று தாங்கும்,

என் அருள் நாயகா;

தீங்கணுகாமல் காரும்,

மா வல்ல ரட்சகா.


3.ஆங்காரம் சுய சித்தம்

தகாத சிந்தையால்

மா கலக்கம் உண்டாகி

நான் தடுமாறினால்,

நீர் பேசும், அருள் நாதா,

கொந்தளிப்படங்கும்;

உம் நேச சத்தம் கேட்டு

என் ஆவி மகிழும்.


4.பின்பற்றினால் விண் வீட்டில்

பேரின்பம் பெறுவீர்,

என்றே உம் சீஷர் நோக்கி

நீர் வாக்கு அளித்தீர்;

அவ்வருள் வாக்கை நம்பி

இவ்வேழை அடியேன்,

இதோ, பின்செல்வேன், என்று

பிரதிக்னை பண்ணினேன்.


5.ஓயாமல் பெலன் தாரும்

உம்மடிச்சுவட்டில்

கால் வைத்து நடந்தேகி

நான் யாத்திரை செய்கையில்

நீர் வழி காட்டி, என்னை

கைதாங்கி வருவீர்;

அப்பாலே மோட்ச வீட்டில்

பேர் வாழ்வை அருள்வீர்1.Eppothum Yeasu Naatha

Ummai Pinpattruvean

Entrae Theermaanamaaga

Neer Ennai Thaangi Kaappeer

Appothu Anjidean

Mun Sentru Paathai Kaattum

Naan Vazhi Thavaraen


2.Boologa Inbam Selvam

Veen Aasaapaasaththaal

En Aathmaa Mayngaamal

Deiveega Belaththaal

Neer Thunai Nintru Thaangum

En Arul Naayaga

Theenganumaal Kaarum

Maa Valla Ratchaka


3.Aangaaram Suya Siththam

Thagaatha Sinthaiyaal

Maa Kalakkam Undaagi

Naan Thadumaarinaal

Neer Peasum Arul Naatha

Konthalippadangum

Um Neasa Saththam Keattu

En Aavi Magilum


4.Pinpattrinaal Vin Veettil

Pearinbam Pearuveer

Entrae Um Sheeshar Nokki

Neer Vakku Aliththeer 

Avvarul Vaakkai Nambi

Evvealai Adiyean

Itho Pin selvean Entru

Pirathiknai Panninean 


5.Oyaamal Belan Thaarum

Ummadi suvattil

Kaal Vaiththu Nadantheagi

Naan Yaaththirai Seikaiyil

Neer Vazhi Kaatti Ennai

Kai Thaangi Varuveer

Appaalae Motcha Veettil

Pear Vaazhvai Arulveerஎப்போதும் இயேசு நாதா - Eppothum Yeasu Naatha


Post a Comment (0)
Previous Post Next Post