ஐயா நீரன்று அன்னா - Iyya Neerentru Anna

 ஐயா நீரன்று அன்னா - Iyya Neerentru Anna


1.ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில்

நையவே பட்ட பாடு ஏசையாவே!

கைகள் கட்டினர்கொலோ? கால்கள் தள்ளாடினவோ?

கயவர்கள் தூஷித்தாரோ ஏசையாவே! – ஐயா


2.திரு முகம் அருள் மங்க செங்குருதிகள் பொங்க‌

பெருந்தீயர் துன்புறுத்த ஏசையாவே!

பொறுமை அன்பு தயாளம் புனிதமாக விளங்க‌

அருமைப் பொருள் தான ஏசையாவே! – ஐயா


3.முள்ளின் முடியணிந்து வள்ளலே என் நிகழ‌

எள்ளளவும் பேசாத ஏசையாவே!

கள்ளன் போலே பிடித்துக் கசையால் அடித்து மிகக்

கன்மிகள் செய்த பாவம் ஏசையாவே! – ஐயா


4.கற்றூணில் சேர்த்திறுக்கிச் செற்றலர் தாம் முறுக்கிக்

கர்வங்கொண்டே ஏசிட ஏசையாவே!

சற்றுமிரக்கமில்லாச் சண்டாளன் ஓடி வந்த‌

சாடிக் கன்னத்தறைய ஏசையாவே! – ஐயா


5.பொன்னான மேனியதில் புழுதி மிகப் படிய

புண்ணியன் நீர் கலங்க, ஏசையாவே

அண்ணலே, அன்பருய்ய அவஸ்தைகளைச் சகித்தீர்

அடியேனைக் காத்தருளும் ஏசையாவே! – ஐயா


1.Iyya Neerentru Anna Kaaibaavin Veettil

Naiyavae Patta Paadu Yeasaiyaavae

Kaigal Kattinar Kolae Kaalgal Thallaadinavo

Kayavarkal Thooshiththaaro Yeasaiyaavae


2.Thiru Mugam Arul Manga Senguruthigal Ponga

Pearuntheeyar Thunpuruththa Yeasaiyaavae

Porumai Anbu Thayaalam Punithamaaga Vilanga

Arumai Porul Thaana Yeasaiyaavae


3.Mullin Mudiyaninthu Vallalae En Nigala

Ellalavum Peasaatha Yeasaiyaavae

Kallan Polae Pidiththu Kasaiyaal Adiththu Miga

Kanmigal Seitha Paavam Yeasaiyaavae


4.Kaattroonil Searththirukki Seattralar Thaam Murukki

Karvankondae Yeasida Yeasaiyaavae

Sattrum Erakkamilla Sandaalan Oodi Vantha

Saadi Kaannatharaya Yeasaiyaavae


5.Ponnaana Meaniyathil Puzhuthi Miga Padiya

Punniyan Neer Kalanga Yeasaiyaavae

Annalae Anbaruiya Avasthaikalai Sagiththeer

Adiyanai Kaaththarulum Yeasaiyaavae


ஐயா நீரன்று அன்னா - Iyya Neerentru Anna


Post a Comment (0)
Previous Post Next Post