பயந்து கர்த்தரின் பக்தி வழியில் - Bayanthu Kartharin bakthi vazhiyil

 பயந்து கர்த்தரின் பக்தி வழியில் - Bayanthu Kartharin bakthi vazhiyil


பல்லவி


பயந்து கர்த்தரின் பக்தி வழியில்


பயந்து கர்த்தரின் பாதை யதனில்

பணிந்து நடப்போன் பாக்கியவான்


அனு பல்லவி


முயன்று உழைத்தே பலனை உண்பான்

முடிவில் பாக்யம் மேன்மை காண்பான்


சரணங்கள்


1.உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்

தண்ணிழல் திராட்சைக் கொடி போல் வளரும்

கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள்

எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்


2.ஒலிவ மரத்தை சூழ்ந்து மேலே

உயரும் பச்சிளங் கன்றுகள் போலே

மெலிவிலா நல்ல பாலருன் பாலே

மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே


3.கர்த்தரின் வீட்டை கட்டாவிடில் அதைக்

கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை

கர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள்

கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை


Bayanthu Kartharin bakthi vazhiyil

Paninthu nadapon bakkiyavan


Muyandru ulaithu balanai unnban

Mudivil rajiyam menmai kaanban


1.Unnutharkinia kanigalai tharum

Thannilai thiratchai kodi pol valarum

Kanniya manaivi magilnthu iruppal

Ennarum nalangal illathil purival


2.Oliva marathai soolnthu melae

Uyarum patchilam kandrugal polae

Melivilla nalla paalar anbalae

Migavum kalithu valvar anbalae


3.Karthar un veetai kattavidil athai

Kattuvor muyarchi veenam ari ithai

Kartharal varum suthanthiram pillaigal

Karpathin kaniyum kartharin kirubai







Post a Comment (0)
Previous Post Next Post