சீரார் விவாகம் ஏதேன் காவிலே - Seeraar vivaaham yeathean kaavilae

 சீரார் விவாகம் ஏதேன் காவிலே - Seeraar vivaaham yeathean kaavilae


சீரார் விவாகம் ஏதேன் காவிலே

நேராய் அமைத்த தேவ தேவனே

தாராய் மன்றலாசியே

வாராய் சுபம் சேரவே


பல்லவி


நேயனே மகா தூய தேவ தேவனே

சீர்மேவும் மெய்மனாசி நீ தரவா

நேயனே மகா தூய தேவ தேவனே

சீர் மேவுமே ஆசிதா


2. மங்கள மணமகன் ( அவர்களுக்கும் )

மங்கள மணமகள் ( அம்மாளுக்கும் )

நேச தேவ தயவாய்

பாசத்துணை சேர்த்துவை – நேயனே


3. நாடோரும் செல்ல பாதைத் தீபமாய்

நாடு உயர்ந்த தேவ நூலதைத்

தேடித்துணை கொண்டன்பாய்

நீடித்திவர் வாழ்ந்திட – நேயனே


4. ஆன்றோர் எந்நாளும் போற்றும் சேயரும்

வானோர் சிறந்த கல்விச் செல்வமும்

சான்றோர் போற்றும் நேயரும்

தோன்றித்திகழ் சீரருள் – நேயனே


5. வாழ்க வாழ்க என்றும் இம்மணர்

வாழ்க இலங்கும் தந்தை தாயாரும்

வாழ்க சுற்றத்தார் அன்பர்

வாழ்க சுபமன்றலும் – நேயனே


Seeraar vivaaham yeathean kaavilae

Naeraai Amaiththa Deva Devanae

Thaaraai mandral aasiye

Vaaraai subam searave


Naeyane mahaa thooya Deva Devanae

Seer meavum mei manaasi nee tharavaa

Naeyane mahaa thooya Deva Devanae

Seer maevume aasithaa


Mangala Manamagan ( Avarkalukum)

Mangala Manamangal (Ammalukum)

Neya Deva Dhayavaai

Paasathunai Serthuvai


Naadorum sella paathai theebamaai

Naadu uyarntha vetha noolathai

Theadi Thunai kondanbaal

Needithavar vaazhnthida


Aandoor Ennalum pottrum seayarum

Vanoor sirantha kalvi selvamum

Saantoor pottrum naeyarum

Thondri thigal seerarul


Vaazhha Vaazhha Entrum immanar

Vaazhha Elangum thanthai thaayarum

Vaazhha suttaththaar Anbar

Vaazhha suba mandralum











Post a Comment (0)
Previous Post Next Post