அந்தரங்கமாக வந்த நீர் - Antharangamaha vantha Neer

 அந்தரங்கமாக வந்த நீர்  - Antharangamaha vantha Neer 


பல்லவி


அந்தரங்கமாக வந்த நீர் 

ஆர்? சொல்ல வேணும் 

யேசையரோ காணும்.


அனுபல்லவி


கந்த மா மலர் சோலை சூழ் வெல்லை 

காவில் வந்தீரோ! என் மேற்

காதல் கொண்டீரோ!


சரணங்கள்


1 பாதியிரவிற் பரம சேனைகள் பாடுவதேதோ! வெகு 

சோதியாய்ப் புன்மிசை துயில்கின்ற 

சூட்சமுமேதோ! அதைச்

சொல்லவொண்ணாதோ!


2. *கோவலர் அமிழ்தோடு வந்துமைக் கும்பிடுகிறார்; நல்ல 

குவளை விழியாள் அன்னை மரிமடி

கொம்மையுண்ணுகிறீர்;- குறு 

நகையுங் கொள்ளுகிறீர்;


3 வாலுடு விண்ணின்று கண்களை மருட்டுதே என்னமோ! உயர் 

சாலப் பொருள்களோடு ஞானிகள்

சந்திப்பதேனோ, இந்த

ஜாலமுமேனோ!


Antharangamaha vantha Neer

Aar Solla Veanum

Yeasaiyaro Kaanum


Kantha Maa Malar Solai Soozh Vellai

Kaavil Vantheero En Mear

Kaathal Kondeero


1.Paathiyiravir Parama Seanaigal Paaduvathetho! Vegu

Soothiyaai Punmisai Thuyilkintra

Sootchamumeatho Athai

Sollavonnaatho


2.Kovalar Amilthodu Vanthumai Kombidukiraar Nall

Kuvalai Vizhiyaal Annai Marimadi

Kommaiyunnukireer Kuru

Nagaiyung Kollukiraar


3.Vaaludu Vinninitru Kankalai Maruttuthae Ennamo Uyar

Saala porullalodu Gnannigal

Santhipathaeno Intha

Jaalamuneano!



Post a Comment (0)
Previous Post Next Post