தேவ போர்ச் சேவகரே - Deva Poor Sevakarae

 தேவ போர்ச் சேவகரே - Deva Poor Sevakarae


1. தேவ போர்ச் சேவகரே!

    நாள் சமீபமாகுது;

    நித்திரை ஏன் வீரரே?

    ஒளி யதிகமாகுது;

    இயேசுவை யறியாமல்

    மாந்தர் மாண்டு போகிறார்;

    காலத்தைக் கழிக்காமல்

    உடனே போர்செய்யப் போவோம்


    பல்லவி


    பேயின் கோட்டை, கொத்தளங்கள்

    எதிர்த்திடிப்போம்;

    சாத்தான் ராஜரீகம்

    செய்யுமிட மெங்கும்

    பேயின் கோட்டை, கொத்தளங்கள்

    எதிர்த்திடிப்போம்

    இயேசு இராஜனுக்கு ஸ்தோத்திரம்

    அவர் நாமத்திற் கெப்போதும்

    மேன்மை, புகழ் துதி கீதம்,

    என்றும் உண்டாவதாக!


2. பாதாள சேனையைப் பார்,

    தந்திர வலைகளால்,

    லட்சக்கணக்கான பேர்

    மாண்டு போனாரானதால்

    உன்னை இயேசு சுவாமிக்கு

    பூசையாகப் படைத்து

    மாழும் ஏழைப் பாவிக்கு

    உன் மீட்பரன்பைக் காட்டு - பேயின்


3. சர்வ வல்ல இயேசுவின்

    இரட்சணிய சேனையார்,

    நானா தேசத்தாருக்கும்

    இரட்சண்யத்தைக் கூறுவார்

    இரட்சணியக் கொடியை

    உயர்த்தி முன் செல்லுவோம்

    இரத்தத்தாலும், தீயாலும்,

    சத்துருவைத் துரத்துவோம் - பேயின்



1.Deva Poor Sevakarae

Naal Sameebamaaguthu

Niththirai Yean Veerarae

Ozhi Athigamaaguthu

Yeasuvai Ariyaamal

Maanthar Maandu Pogiraar

Kaalaththai Kalikkaamal

Udanae Poorswiyya Povom


Peayin Kottai Koththanlangal

Ethiridippom

Saaththaan Raajareegam

SeiyumidaM Engum

Peayin Kottai Koththalangal

Ethirththidippom

Yeasu Raajanauku Sthothiram

Avar Naamaththirkku Eppothum

Meanmai Pugal Thuthi Geetham

Entrum Undaavathanga


2.Paathaala Seanaiyai Paar

Thanthira Valaikalaal

Latchakanakkaana Pear

Maandu Ponaaraanathaal

Unnai Yeasu Swamikku

Poosaiyaaga Padaithtu

Maalum Yealai Paavikku

Un Meetparanbai Kaattu


3.Sarva Valla Yeasuvin

Ratchaniya Seanaiyaar

Naanaa Theasathaarukkum

Ratchanyaththai Kooruvaar

Ratchaniya Kodiyai

Uyarththi Mun Selluvom

Raththathaalum Theeyaalum

Saththuruvai Thuraththuvom 

தேவ போர்ச் சேவகரே - Deva Poor Sevakarae


Post a Comment (0)
Previous Post Next Post