தந்தானைத் துதிப்போமே - Thanthanai Thuththippomae

 தந்தானைத் துதிப்போமே - Thanthanai Thuththippomae


பல்லவி


தந்தானைத் துதிப்போமே - திருச்

சபையாரே (தேவ தாசரே), கவி - பாடிப்பாடி.


அனுபல்லவி


விந்தையாய் நமக்கனந்தனந்தமான,

விள்ளற்கரியதோர் நன்மை மிக மிகத் --- தந்தானைத்


சரணங்கள்

1. ஒய்யாரத்துச் சீயோனே - நீயும்

மெய்யாகக் களிகூர்ந்து நேர்ந்து,

ஐயனேசுக்குனின் கையைக் கூப்பித் துதி

செய்குவையே, மகிழ் கொள்ளுவையே, நாமும் --- தந்தானைத்


2. கண்ணாரக் களித்தாயே - நன்மைக்

காட்சியைக் கண்டு ருசித்துப் புசித்து

எண்ணுக்கடங்காத எத்தனையோ நன்மை

இன்னுமுன்மேற் சோனா மாரிபோற் பெய்துமே - தந்தானைத்


3. சுத்தாங்கத்து நற்சபையே - உனை

முற்றாய்க் கொள்ளவே அலைந்து திரிந்து

சத்துக் குலைந்துனைச் சத்தியாக்கத் தம்மின்

ரத்தத்தைச் சிந்தி எடுத்தே உயிர் வரம் - தந்தானைத்


4. தூரம் திரிந்த சீயோனே - உனைத்

தூக்கியெடுத்துக் கரத்தினிலேந்தி,

ஆரங்கள் பூட்டி அலங்கரித்து நினை

அத்தன் மணவாட்டி யாக்கினது என்னை! - தந்தானைத்


5. சிங்காரக் கன்னிமாரே, - உம்

அலங்காரக் கும்மி அடித்துப் படித்து,

மங்காத உம் மணவாளன் யேசுதனை

வாழ்த்தி வாழ்த்தி ஏத்திப் பணிந்திடும் - தந்தானைத்


Thanthanai Thuththippomae - Thiru

Sabaiyorae (Deva Thasarae) Kavi Paadipaadi


Vinthaiyaai Namakananthamaana

Villarkariyathor Nanmai Miga Miga


1.Oiyaaraththu Seeyonae - Neeyum

Meiyaaga Kazhi Koornthu Nearnthu

Aiyyaneasu kunin Kaiyai Kooppi Thuthi

Seiguvaiyae Magil Kolluvaiyae Naamum


2.Kannara Kazhithaayae - Nanmai

Kaatchiyai Kandu Ruchithu Pusithu

Ennukkadankaatha Eththanaiyo Nanmai

Innumunmear Soona Maari Por Peithumae


3.Suththaangaththu Narsabaiyae Unai

Muttraai Kollavae Alainthu Thirinthu

Saththu Kulainthunai Saththiyakka Thammin

Raththathau Sinthi Eduthae Uyir Varam


4.Thooram Thirintha Seeyonae Unai

Thookki Eduththu Karaththinileanthi

Aarangal pootti Alangariththu Ninai

Aththan Manavaatti Aakkinathu Ennai


5.Singaara Kannimaarae Um

Alangaara Kummi Adiththu Padiththu

Mangaatha Un Manavaalan Yesuthani

Vaalthi Vaalthi Yeaththi Paninthidumதந்தானைத் துதிப்போமே - Thanthanai Thuththippomae

Post a Comment (0)
Previous Post Next Post