நீர் என் வாழ்வின் சத்துவம் - Neerae En Vaazhvin Saththuvam

 நீர் என் வாழ்வின் சத்துவம் - Neerae En Vaazhvin Saththuvam

நீர் என் வாழ்வின் சத்துவம்

நீர் என் வாழ்வின் அற்புதம்

உம் வல்ல செயலுக்கு நான் என்னை அர்ப்பணம் (2)

நீர் என் நேசரே

நான் என்றும் உம்முடன் நெருங்கி வாழ்ந்திட 

என் தந்தையே நான் என்றும் உம்முடன் அன்புகூர்ந்திட

என் நண்பனே நான் என்றும் உம்முடன் பேசி மகிழ்ந்திட

என் வாழ்க்கையே

நான் என்றும் உம்முடன் வாழ்ந்து மகிழ்ந்திடுவேன்

1.மரண இருளின் பள்ளத்தாக்கில்

நான் நடந்த வேளைதனில்

என்னோடே பள்ளத்தாக்கில் துணையாய் நின்றீரே 

சுற்றத்தார் குழ்ந்து நிற்க பற்றுள்ளோர் பதரி நிற்க

குடும்பத்தின் மருத்துவராக என்னை காத்தீரே

நீர் என் நேசரே

நாள் என்றும் உம்முடன் நெருங்கி வாழ்த்திட 

என் தந்தையே நான் என்றும் உம்முடன் அன்புகூர்ந்திட

என் நண்பனே நான் என்றும் உம்முடன் பேசி மகிழ்ந்திட

என் வாழ்க்கையே

நான் என்றும் உம்முடன் வாழ்ந்து மகிழ்ந்திடுவேன்

2.மீண்டும் எனக்கு ஜீவன் தந்து

சர்வாங்க சுகத்தைப் பெற்று

அழைத்தீர் உம் சேவைக்கென்று

உமக்காய் வாழ்ந்திடுவேன்(ஒடிடுவேன்)

வாழ்க்கை என்னும் பாதைதனில்

வழிகாட்டும் நேசர் கையிலே

முழுமையாய் என்னை என்றும் அர்ப்பணிக்கின்றேன்(2)

நீர் என் நேசரே

நான் என்றும் உம்முடன் நெருங்கி வாழ்ந்திட

என் தந்தையே நான் என்றும் உம்முடன் அன்புகூர்ந்திட

என் நண்பனே நான் என்றும் உம்முடன் பேசி மகிழ்ந்திட

என் வாழ்க்கையே

நான் என்றும் உம்முடன் வாழ்ந்து மகிழ்ந்திடுவேன் (3)

நீர் என் வாழ்வின் சத்துவம் - Neerae En Vaazhvin Saththuvam

Post a Comment (0)
Previous Post Next Post