ஆயிரம் ஆயிரம் பாடல்களை - Aayiram Aayiram Paadalgalai

 ஆயிரம் ஆயிரம் பாடல்களை - Aayiram Aayiram Paadalgalai


1. ஆயிரம் ஆயிரம் பாடல்களை

ஆவியில் மகிழ்ந்தே பாடுங்களேன்

யாவரும் தேன்மொழிப் பாடல்களால்

இயேசுவைப் பாடிடவாருங்களேன்


அல்லேலூயா! அல்லேலூயா!

என்றெல்லாரும் பாடிடுவோம்

அல்லலில்லை! அல்லலில்லை!

ஆனந்தமாய் பாடிடுவோம்


2. புதிய புதிய பாடல்களைப்

புனைந்தே பண்களும் சேருங்களேன்

துதிகள் நிறையும் கானங்களால்

தொழுதே இறைவனைக் காணுங்களேன் – அல்லேலூயா


3. நெஞ்சின் நாவின் நாதங்களே

நன்றி கூறும் கீதங்களால்

மிஞ்சும் ஓசைத் தாளங்களால்

மேலும் பரவசம் கூடுங்களேன் – அல்லேலூயா


4. எந்த நாளும் காலங்களும்

இறைவனைப் போற்றும் நேரங்களே

சிந்தை குளிர்ந்தே ஆண்டுகளாய்

சீயோனில் கீதம் பாடுங்களேன் – அல்லேலூயா


1.Aayiram Aayiram Paadalgalai

Aaviyil Maglinthae Paadungalaen

yaavarum Thean Mozhi Paadalkalaal

Yesuvai Paadida vaarungalaen


Allelujah! Allelujah! 

Entrellarum Paadiduvom

Allalillai Allalillai

Aananthamaai Paadiduvom


2.Puthiya Puthiya Paadalgalai

Punainthae Pangalum Searungalaen

Thuthikal Niraiyum Ganangalaal

Thozhuthae Iraivanai Kaanungalaen


3.Nenjin Naavin Thaathangalae

Nantri Koorum Geethangalaal

Minjum Oosai Thaalangalaal

Mealum Paravasam Koodungalaen


4. Entha Naalum Kaalangalum

Iraivanai Pottrum Nearangale

Sinthai Kulrinthae Aandukalaai

Seeyonil Geetham Paadungalaen


ஆயிரம் ஆயிரம் பாடல்களை - Aayiram Aayiram Paadalgalai


Post a Comment (0)
Previous Post Next Post