தேவாசனப்பதியும் சேனை - Devasanapathium Senai

 தேவாசனப்பதியும் சேனை - Devasanapathium Senai


1.தேவாசனப்பதியும் சேனைத் தூதரைவிட்டுத்

தேவர் குலமாய் வாரதாரையா? இவர்

தேவ னுரைப்படி

பவ வினைப்படி

ஏவை மனப்படி

ஆவல் மிகப்படி

வணங்குஞ் ஜெகஜோதிப் பொருள்! தானையா- இவர்


2.முன்னணி பின்னணியினி லோசன்னா! ஓசன்னா வென

ஓர் மறியின்மீதில் வாரதாரையா? இவர்

உத்தம நேசனாம்

சத்திய போசனாம்

பத்தரின் வாசனாம்

நித்திய ஈசனாம்

உன்னதத்தின் மேன்மைத் தெய்வந் தானையா- இவர்


3.பாலர் துதித்திடவும் ஞாலம் மதித்திடவும்

பாவலருடன் வாரதாரையா? இவர்

பசியற்றிருந்தவர்

பொசிப்பற்றிருந்தவர்

வசைபெற்றிருந்தவர்

அசைவற்றிருந்தவர்

பாவ விமோசன ராசன் தானையா.- இவர்


4.சீயோன் குமாரியிடம் நேயமதாகத் தேடிச்

சிங்காரமாய் வருவதாரையா? இவர்

சீருற்றதிபனாம்

பேர் பெருற்றிறைவனாம்

பாருற்றதிபனாம்

வேருற்றெழுந்தனாம்

சீவ வழி சொல்வரிவர் தானையா.- இவர்


5.எருசலேம் வீதிவழி பெரிய திரளுடனே

குருத்தோலை வருவதாரையா? இவர்

அரிவை பவமற

பெருமை நிதந்தர

கிருபை துரந்தர

அருமை நிரந்தர

ஏசு கிறிஸ்திறைவர் தானையா.- இவர்


6.வழியில் மரக் கிளைகள் வரிசையதாய்ப் பரப்ப

வஸ்திரமீதில் வீச வாரதாரையா? இவர்

வல்லவராங் குரு

சொல் தவறாக் குரு

நல்லவராங் குரு

துல்லிய சற் குரு

வரமிகுந்த சற்குரு தானையா.- இவர்



1.Devasanapathium Senai Thootharai Vittu

Devar Kulamaai Vaarathaaraiyaa Evar

Devanuraippadi

Pava Vinaippadi

Yeavai Manppadi

Aaval Migappadi

Vanakum Jega Jothi Porul Thaanaiyaa


2.Munnani Pinnianiyinil Osanna Osanna Vena

Oor Mariyin Meethil Vaarathaaraiyaa Evar

Uthama Neasanaam

Saththiya Posanaam

Baktharin Vaasanaam

Niththiya Eesanaam

Unnathaththin Meanmaiyai Deiva Thaanaiyaa


3.Paala Thuthtithidavum Gnalam Maththidavum

Paavalurudan Vaarathaaraiyaa Evar

Pasiyattrisunthavar

Vasai Pettrirunthavar

Asai Vattrirunthavar

Paava Vimosana Raasan Thaanaiyaa


4.Seeyon Kumaariradam Neayamathaaga Theadi

Singaaramaai Vaarathaaraiyaa Evar

Seeruttrathipanaam

Pear Pettiraivanaam

Paaruttrathipanaam

Vearuttrulenthanaam

Seeva Vazhi Solvarivar Thaanaiyaa


5.Erusaleam Veethi Vazhi Peariya Thiraludanae

Kuruththolai Vaarathaaraiyaa Evar

Arivai Pavamara

Pearumai Nithanthara

Kirubai Thuranthara

Arumai Niranthara

Yeau Kirsithiraivar Thaanaiyaa


6.Vazhiyil Mara Kilaikal Varisaiyathaai Parappa

Vasthirameethil Veesa Vaarathaaraiyaa Evar

Vallvarangu

Sol Thavaraa Kuru

Nallavarang Kuru

Thulliya Sar kuru

Varamiguntha Sarkuru Thaanaiyaa



தேவாசனப்பதியும் சேனை - Devasanapathium Senai

Post a Comment (0)
Previous Post Next Post