திவ்விய பாலன் பிறந்தீரே - Dhivviya Paalan Pirantheerae

 திவ்விய பாலன் பிறந்தீரே - Dhivviya Paalan Pirantheerae


1.திவ்விய பாலன் பிறந்தீரே

கன்னி மாதா மைந்தன் நீர்

ஏழைக் கோலம் எடுத்தீரே

சர்வ லோகக் கர்த்தன் நீர்.


2. பாவ மாந்தர் மீட்புக்காக

வான மேன்மை துறந்தீர்

திவ்விய பாலா, தாழ்மையாக

மண்ணில் தோன்றி ஜெனித்தீர்.


3. லோக ராஜா வாழ்க வாழ்க,

செங்கோல் தாங்கும் அரசே!

பூமியெங்கும் ஆள்க, ஆள்க,

சாந்த பிரபு, இயேசுவே!


4. தேவரீரின் ராஜ்யபாரம்

நித்திய காலமுள்ளது

சர்வலோக அதிகாரம்

என்றும் நீங்கமாட்டாது.


5. வல்ல கர்த்தா பணிவோடு

ஏக வாக்காய் போற்றுவோம்

நித்திய தாதா பக்தியோடு

நமஸ்காரம் பண்ணுவோம்.


6. ஸ்தோத்திரம், கர்த்தாதி கர்த்தா

ஞானத்துகெட்டாதவர்

ஸ்தோத்திரம், ராஜாதி ராஜா

ஆதியந்தமற்றவர்.1.Dhivviya Paalan Pirantheerae

Kanni Maathaa Mainthan Neer

Yealai Koalam Edutheerae

Sarva Loga Karththan Neer


2.Paava Maanthar Meetppukkaga

Vaan Meanmai Thurantheer

Dhivviya Paala Thazhmaiyaga

Mannil Thontri Jeniththeer


3.Loga Raaja Valka Valka

Sengoal Thaangum Arase

Boomiyengum Aalka Aalka

Saantha Pirabu Yeasuvae


4.Devareerin Raajyapaaram

Niththiya Kaalamullathu

Sarvaloga Athikaaram

Entrum Neengamaattathu


5.Valla Karththaa Panivodu

Yeaga Vaakkaai Pottruvom

Niththiya Thaatha Bakthiyodu

Namaskaaram Pannuvom


6.Sthothiram Karththaathi Karththaa

Gnanaththu Keattaathavar

Sthosthiram Raajaathi Raaja

Aathiyantha Mattavar


திவ்விய பாலன் பிறந்தீரே - Dhivviya Paalan Pirantheerae


Post a Comment (0)
Previous Post Next Post