பொற்பு மிகும் வானுலகும் - Porpu Migum Vaanulagam

 பொற்பு மிகும் வானுலகும் - Porpu Migum Vaanulagam


சீயோன் 1:

பொற்பு மிகும் வானுலகும்

பூவுலகும் படைத்த பரப்பொருளே, இங்கே

பொந்திப்பிலாத் தரண்மனையில்

வந்து நிற்கும் காரணமேன், கோவே?


கிறிஸ்து:

கற்பனை மீறிய பவத்தால்

கடின நரகாக்கினைப் படாமல் உன்னைக்

காப்பதற் கிங்கே ஞாய‌

தீர்ப்பில் உற்றோம் சீயோனின் மாதே – பொற்பு


சீயோன் 2:


துய்ய திரு மேனி எல்லாம்

நொய்ய உழுத நிலம்போல ஆகி கன‌

சோரி சிந்த வாரதினால்

நீர் அடிக்கப்பட்டதென்ன கோவே? – பொற்பு


கிறிஸ்து:


வையகத்தின் பாதகத்தால்

பெய்யும் நடுதீர்வையெல்லாம் ஆற்ற இந்த‌

வாதை எல்லாம் பட்டிறக்க‌

போத மனம் சம்மதித்தோம் மாதே – பொற்பு


சீயோன் 3:


செய்ய கண்கள் உறச் சிவந்து

திருக் கன்னங்கள் தடித்து மிக வீங்கி முழுச்

சென்னியின் ரோமங்கள் எல்லாம்

வின்னமுற்றிங் கிருப்பதென்ன கோவே? – பொற்பு


கிறிஸ்து:


மையிருளில் குருக்களுடை

மாளிகையில் படித்தின பாடெல்லாம் இங்கே

வன் கொலைஞரால் அடிக்க‌

பங்கமுற்ற கோலம் இது மாதே – பொற்புSeeyon 1:

Porpu Migum Vaanulagam

Poovulagum Padaiththa Paraporulae Ingae

Ponthipilaath Tharanmanaiyil

Vanthu Nirkum Kaaranamean Kovae 


Kiristhu :

Karpanai Meeriya Pavaththaal

Kadina Narakaakkinai Padaamal Unnai

Kaapatharkku Ingae Gnaaya

Theerppil Uttrom Seeyonin Maathae


Seeyon 2:

Thuyya Thiru Meani Ellaam

Noiya Ulutha Nilam Pola Aagi Kana

Soori Sintha Vaarathinaal

Neer Adikka Pattathen Kovae


Kiristhu :


Vaiyakaththin Paathakaththaal

Peiyum Nadu Theervai Yelaam Aattra Intha

Vaathai Ellam Pattrirakka

Potha Manam Sammathithom Maathae


Seeyon 3:

Seiya Kangal Ura Sivanthu

Thiru Kannagal Thadiththu Miga Veengi Muzhu

Senniyin Romangal Ellam

Vinna Muttri Kiruppathenna Kovae 


Kiristhu :


Maiyirulil Gurukkaludai

Maaligaiyil Padiththina Paadellaam Ingae

Van Kolaignkaraal Adikka

Pangamuttra Koalam Ithu Maathae 


பொற்பு மிகும் வானுலகும் - Porpu Migum Vaanulagam


Post a Comment (0)
Previous Post Next Post