தருணம் இதில் யேசுபரனே - Tharunam Ithil Yesuparanae

 தருணம் இதில் யேசுபரனே - Tharunam Ithil Yesuparanae


பல்லவி


தருணம் இதில் யேசுபரனே!-உமதாவி

தரவேணும் சுவாமீ!


அனுபல்லவி


அருள்தரும் சத்ய வல்ல, அன்பின் ஜெபத்தின் ஆவி

அபிஷேகம் பெறுமுன்றன் அடியர்மேல் அமர்ந்திட. - தருணம்


சரணங்கள்


1. விந்தை ஞானம் அறிவு வேத சத்தியங்களில்

மிக்க உயர்ந்து தேர்ந்து விண்ணொளி இவர் வீசச்,

சத்யம் சகலத் துள்ளும் தாசர்களை நடத்தும்

சத்ய ஆவி இவர்மேல் சம்பூரணமாய்ப் பெய்ய. - தருணம்


2. பாவத்தை வேரறுக்கும் ஆவியின் வாள்பிடித்துப்

பலமாகவே இவர் உலகினில் போர் செய்யச்,

சாவுற்றோர்களை நித்ய ஜீவனைப் பெறச் செய்யும்

மா வீரராய் விளங்க வல்லாவியே இறங்க. - தருணம்


3. ஆவியின் கனியென்னும் அன்பாதி குணங்களை

அனுதினமும் இவர் அணிகல மாயணிந்து,

மேவும் திருமந்தையை மேய்த்து வளர்க்க நல்ல

மேய்ப்பரே, அன்பின் ஆவி வாய்ப்பாய் இவரில் தங்க. - தருணம்


4. ஏக்கம் ஆத்தும தாகம் இடைவிடாமல் அடைந்து

ஊக்கத்துடனே இவர் ஓயாமல் ஜெபித்திட,

வாக்குக் கடங்காப் பெருமூச்சோடே எமக்காக

மன்றாடும் ஜெப ஆவி என்றென்றும் நிரம்பிட. - தருணம்


5. மாசுகளற உம்மில் வாசமாக நிலைத்து

மாபணிவாய் உந்தம் மகிமையை நிதம் தேடத்,

தேசுறு அருள்நாதா, தாசர் உள்ளத்தினின்று

ஜீவநதிகள் ஓடிச் செல்வம் பொழியச் செய்ய. - தருணம்Tharunam Ithil Yesuparanae Umathaavi

Tharaveanum Swami


Arul Tharum Sathya Valla Anbin Jebaththin Aavi

Abisheham Perumuntran Adiyaar Mael Amarnthida


1.Vinthai Gnanam Arivu Vedha Saththiyangalail

Mikka Uyarnthu thearnthu Vinnoli Evar Veesha

Sathyam Sagala Thullum Thaasarkalai Nadaththum

Sathya Aavi Evar Meal Sambooranamaai Peiyaa


2.Paavaththai Veararukkum Aaviyin Vaazh Pidiththu

Palamaagavae Evar Ulaginil Poar Seiya

Saavuttrorkalai Nithya Jeevanai Peara Seiyum

Maa Veeraraai Vilanga Vallaaviyae Eranga


3.Aaviyin Kaniyennum Anbaathi Gunangalai

Anuthinamum Evar Anikala Maayninthu

Meavum Thirumanthaiyae Meaiththu Valarkka Nalla

Meipparae Anbin Aavi Vaaipaai Evaril Thanga


4.Yeakkam Aaththuma Thaagam Idaividaamal Adainthu

Ookkaththudanae Evar Ooyaamal Jebiththida

Vaakku Kadanga Perumoochodae Emakkaaga

Mantraadum Jeba Aavi Entrentrum Nirambida


5.Maasukalara Ummil Vaasamaaga Nilaithu

Maapanivaai Untham Magimaiyai Nitham Theada

Theasuru Arulnaatha Thaasar Ullaththinintru

Jeeva Nathikal Oodi Selvam Pozhiya Seiya 


தருணம் இதில் யேசுபரனே - Tharunam Ithil YesuparanaePost a Comment (0)
Previous Post Next Post