ஏசையா பிளந்த ஆதிமலையே - Yeasaiya Pilantha Aathi Malaiyae

 ஏசையா பிளந்த ஆதிமலையே - Yeasaiya Pilantha Aathi Malaiyae


பல்லவி


ஏசையா, பிளந்த ஆதிமலையே,

மோசநாளில் உன்னில் ஒளிப்பேனே .


சரணங்கள்


1. மோசமுள்ள பாவ நோய் முழுவதும் என்னில் தீர், ஐயா;

தோஷம் நீக்கும் இரு மருந்தாமே-சொரிந்த உதிரம் தீருமே. - ஏசையா


2. இகத்தில் என்னென்ன செய்தாலும் ஏற்காதே உன் நீதிக்கு,

மிகவாய் நொந்தழுதும் தீராதே-மீளாப் பாவ ரோகமே;-ஏசையா


3. பேரறம் அருந்தவம் பெருமிதமாய்ச் செய்திடினும்,

நேரஸ்தரின்பாவம் நீங்குமோ?-நீங்காதே உன்னாலல்லால்; - ஏசையா


4. வெறுங் கையோடோடி வந்து, வினை நாசன் பேரருள் கெஞ்சித்

திருச்சிலுவை தஞ்சம் புகுந்து,-தியங்கி அணைத்தே நிற்பேன்; - ஏசையா


5. அருளிலருகோன்  ஆனாலும், அபயமுன்றன் நீதிக்கே!

கருணை ஊற்றில் கழுவமாட்டாயோ?-கழுவாயாகில் சாவேனே; - ஏசையா


6. ஜீவனோடே தங்கினாலும், தெளிகண் சாவில் மங்கிலும்,

தேவாசனமுன் அஞ்சி நிற்கத்-தேவலோக மேறிலும், - ஏசையா



Yeasaiya Pilantha Aathi Malaiyae

Mosa Naalil Unnil Olippeanae 


1.Mosamulla Paava Noi Muluvathum Ennil Theer Aiyya

Thosam Neekkum Iru Marunthaamae Sorintha Uthiram Theerumae


2.Egaththil Ennenna Seithaalum YearKaathae un Neethikku

Migavaai Nonthaluthum Theerathae Meela Paava Rogamae


3.Peararam Arunthavam Pearu Mithamaai Seithidinum

Nearastharin Paavam Neengumo Neengatahe Unnaalallaal


4.Vearum Kaiyodi Vanthu Vinai Naasan Peararul Kenji

Thiru Siluvaiyai Thanjam Pugunthu Thiyangi Ananithae Nirpean


5.Arulilirukoan Aanaalum Abayamun Than Neethikkae

Karunai Oottril Kaluvamaattaaya Kaluvaayaagil Saveanae


6.Jeevanodae Tahnginaalum Thealikan Saavil Mangilum

Devaasanamun Anji Nirka Devaloga Mearilum 


ஏசையா பிளந்த ஆதிமலையே - Yeasaiya Pilantha Aathi Malaiyae


Post a Comment (0)
Previous Post Next Post