சீயோன் பர்வதம் - Seeyon Parvatham Lyrics

சீயோன் பர்வதம் - Seeyon Parvatham Lyrics Written, Composed & Sung by Dr. Joseph Aldrin, Tamil Christian New Song


உம் சமூகத்தின் அடையாளமான பர்வதம்

உம் வார்த்தையை ஆதாரமாய் கொண்ட பர்வதம் -2


அரணான நகரமான சீயோன் பர்வதம்

நான் ஆசையாய் ஓடி வரும் சீயோன்பர்வதம்-என்‌ -2

-உம் சமூகத்தின்


1.வலக்கரம் சம்பாதித்த பர்வதம்

பூரண வடிவுள்ள பர்வதம்

தேவன் பிரகாசிக்கும் பர்வதம்

நீர் விரும்பி வாசம் பண்ணும் பர்வதம் -2


என்றென்றும் அசையாத பர்வதம் 

ராஜாவின் (மகாராஜாவின் ) நகரமான சீயோன் பர்வதம் - இது -2


-உம் சமூகத்தின்



2. ஆயிரம் பதினாயிரம் தூதர்கள் 

பேரெழுதப்பட்ட முதற்பேறானவர்கள்

நியாதிபதியாகிய தேவனும் 

நன்மை பேசும் இயேசுவும் அவர் ரத்தமும் - 2


என்றென்றும் வாசம்பண்ணும் பர்வதம்

ஜீவனுள்ள தேவன் தங்கும் சீயோன் பர்வதம் - இது -2


-உம் சமூகத்தின்



3. அப்பத்தால் திருப்தியை தருகிறீர் 

ஆராதிக்க வெற்றியை தருகிறீர் 

வெளிச்சம்காட்ட விளக்காக வருகிறீர் 

அனல்மூட்டி புது பெலன் தருகிறீர் - 2


என் கோலை துளிர்க்க செய்கிறீர்

என் கிரீடம் பூக்கச் செய்யும் சீயோன் பர்வதம் - இங்கு -2


-- உம் சமூகத்தின்



Post a Comment (0)
Previous Post Next Post