கண் விழித்து எழுந்து வா - kan Vilithu Elunthu Vaa

 கண் விழித்து எழுந்து வா - kan Vilithu Elunthu Vaa


கண் விழித்து எழுந்து வா மானிடனே

கருணை நாதன் இயேசுவிடம்


சரணங்கள்


1. நிர்ப்பந்தமான உன் நிலையுணரந்து

நீச உலகத்தின் நேயம் மறந்து

துர்க்கந்தமான துர்த்தொழில் துறந்து

தூரதுன்மார்க்க ஜீவியம் பிரிந்து - கண்


2. மனது போல் நடக்கத் துணியாதே

மாய உலகின் வாழ்வை விரும்பாதே

உனதிஷ்டம்போல் நடக்க உன்னாதே

உல்லாச நடக்கை பொல்லாததே - கண்


3. இருதயமுடைந்து நீ எழவேண்டும்

இளைய மகனைப் போல் வரவேண்டும்

பரம தகப்பன் பாதம் விழவேண்டும்

பாவமன்னிப்பை நீ பெற வேண்டும் - கண்


4. பேரன்புறும் பரம தந்தையவர்

பிள்ளை உன்னைச் சதாவும் மறவாதவர்

தூரம் பிரிந்திருக்க மனமற்றவர்

சொந்த வீட்டில் வைத்து சூட்சிப்பவர்! - கண்


5. அசுத்தமறக் கழுவி அலங்கரிப்பார்

ஆடையாக நீதியுடை தரிப்பார்;

பசிக்குப் பருக ஞானப்பால் தருவார்

பரலோக இன்பப் பதவி சேர்ப்பார் - கண்


kan Vilithu Elunthu Vaa Maanidane

Karunai Naathan Yesuvidam


Nirpanthamaana Un nilaiunarnthu

Neesa Ulagakathin Neayam Maranthu

Thurkanthamaana Thur-Thozhil Thuranthu

Thoora Thun maarkka Jeeviyam Pirinthu - kan


Manathu pol Nadakka Thuniyathae

Maaya Ulagin Vaazhvai Virumbathae

Una Thistam pol nadakka unnaathae

Ullasa nadakkai Pollaathathae - kan


Iruthayamudanthu Nee Yezhavendum

Elaya Maganai Pol Varavendum

Parama thagappan Paatham Vizha Vendum

Paava mannippai Nee Pera Vendum - kan


Pearanbum Parama Thanthaiyavar

Pillai Unnai sathauvum Maravathavar

Thooram Pirinthirukka Manamattavar

Sontha Veettil Vaithu chootchippavar -kan


Asuththamara kaluvi Alangarippaar

Aadaiyaaga Neethivudai Tharippaar

Pasikku Paruga Ganapaal Tharuvaar

Paraloga Inba Pathavi Searppaar - kan




Post a Comment (0)
Previous Post Next Post