ஆயத்தமாயிருங்கள் எதிர்போக - Aayaththamaairungal Ethirpoga

 ஆயத்தமாயிருங்கள் எதிர்போக - Aayaththamaairungal Ethirpoga 


பல்லவி


ஆயத்தமாயிருங்கள் எதிர்போக - அறி

யாத நேரம் வருவார் மணவாளன்


சரணங்கள்


1. மாய பாச வினைகள் மாய்த்துவிட்டு - மனம்

மாறி நல் அகச்சுத்தம் மருவிக் கொண்டு - ஆய


2. இயேசுவை நண்பனாய் ஏற்றுக்கொண்டு - அவர்

ஈயும் மெய்ச் சமாதானம் பெற்றுக்கொண்டு - ஆய


3. சத்திய வேத போதனையில் - நடந்து

உத்தமராய்த் தேவபக்தராய் - ஆய


4. ஜீவ கனி புசித்து திருப்தி கொள்ள - நித்ய

ஜீவ தண்ணீர் குடித்து சுகித்திருக்க - ஆய


5. நித்திய ஆனந்த பாக்கியங்கள் - நல்ல

நேய மணவாளனோடனுபவிக்க - ஆய


Aayaththamaairungal Ethirpoga 

Ariyatha Nearam Varuvaar Manavaalan


Maaya Paasa Vinaigal Maaithuvittu - Manam

Maari Nal Agasuthtam Maruvi Kondu - Aaya


Yesuvai Nanbanaai yeattrukondu - Avar

Eeyum Mei samaathaanam Pettrukondu - Aaya


Saththiya Vedha Pothaiyil - nadanthu

Uththamaraai Deva Baktharaai - Aaya


Jeeva kani pusiththu Thiruppi Kolla - Nithya

Jeeva Thanner kudiththu Sugiththirukka - Aaya


Niththiya Aanantha Bakkiyangal - Nalla

Neaya Manavalanodu Anupavikka - Aaya



Post a Comment (0)
Previous Post Next Post