இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா - Ratchipin Aanantha Santhosangkaana

 இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா - Ratchipin Aanantha Santhosangkaana 


பல்லவி


இரட்சிப்பின் ஆனந்த சந்தோஷங்காண ஓடிவா

பட்சமுடனே இரட்சகரண்டை ஓடி வா


சரணங்கள்


1. பாவம் போக்கும் நதி அவர் பக்கம் நின்று ஓடுது

ஆவலுடனே இரட்சகரண்டை ஓடி வா - இரட்சி


2. உன் பாவ பாரம் நீக்க உதிரம் சிந்த அடிகொண்டார்

அன்புடனே இரட்சகரண்டை ஓடி வா - இரட்சி


3. கல்வாரி மேட்டில் ஐந்து காயங்காட்டி நிற்கிறார்

நல் மனதுடன் இரட்சகரண்டை ஓடி வா - இரட்சி


4. ஆசீர்வாதத்தைக் கூறி அன்புடனே அழைக்கிறார்

நேசமுடனே இரட்சகரண்டை ஓடி வா - இரட்சி


5. பாவி உன்னை ஈடேற்றப் பரலோகம் விட்டாரே;

தாவியே நீ அவர் பாதந்தேடி ஓடி வா - இரட்சி


Ratchipin Aanantha Santhosangkaana oodi vaa

Patchamudanae Ratchakarandai Oodi vaa


Paavam pokkum Nathi Avar Pakkam Nintru ooduthu

Aavaludanae Ratchakarandai Oodi vaa


Un Paava Paaram Neekka Uthiram Sintha Adikondaar

Anbudanae Ratchakarandai Oodi vaa


Kalvaari Meattil Ainthu kaayankaatti Nirkiraar

Nal Manathudanae Ratchakarandai Oodi vaa


Aaseervaththai Koori Anbudanae Alaikiraar

Neasamudanae Ratchakarandai Oodi vaa


Paavi Unnai Eedettra Paralogam Vittarae

Thaaviyae Nee Avar paathantheadi Oodi Vaa



Post a Comment (0)
Previous Post Next Post