எங்கள் ஆத்ம நேசரே - Engal Aathma Neasarae

 எங்கள் ஆத்ம நேசரே  - Engal Aathma Neasarae


  பல்லவி


  எங்கள் ஆத்ம நேசரே நீர்

  எழுந்தருளும் இந்த வீட்டில்


  அனுபல்லவி


  எந்தையே நீர் இன்றும் என்றும்

  எம்மிடையே தங்கும் தங்கும்


  சரணங்கள்


1. இங்கு வசிக்கும் நாட்களெல்லாம்

    இன்ப வாழ்க்கை அமைந்திடவே

    அன்பர் எங்கள் ஆதி துங்கா

    அன்பின் ஆசி அருளும் அருளும் - எங்கள்


2. சோதனையும் வேதனையும்

    சோர்புறச் செய்யும் வேளையில்

    நாதனே உம்மில் நிலைக்க

    நல்லாசியால் நிரப்பும் நிரப்பும் - எங்கள்


3. அத்தனே உம்மோடுறவாய்,

    நித்தமும் நிலைத்து ஒழுக

    சத்திய வசன ஞான,

    சத்துணவால் நிறைக்க நிறைக்க - எங்கள்


4. அம்பரா மேல் வீட்டின் நாட்டம்,

    ஆத்துமாவின் அனுதின தேட்டம்,

    பூர்த்தி செய்யும் பொற்பதியாய்

    ஆக்கிடவே இரங்கும் இரங்கும் - எங்கள்



Engal Aathma Neasarae Neer

Eluntharulum Intha Veettil


Enthaiyae Neer Intrum Entrum

Emmidaiyae Thangum Thangum


1.Ingu Vasikkum Naatkalellaam

Inba Vaalkkai Amaithidavae

Anbar Engal Aathi Thungaa

Anbin Aasi Arulum Arulum


2.Sothaniyum Veadhaniyum

Soorpura Seiyum Vealaiyil

Naathanae Ummil Nilaikka

Nallaasiyaal Nirappum Nirappum 


3.Aththanae Ummoduravaai

Niththamum Nilaiththu Ozhuga

Saththiya Vasana Gnana

Saththunavaal Niraikka Niraikka


4.Ambaraa Meal Veettin Naattam

Aaththumaavin Anuthina Theattam

Poorththi Seiyum Porpathiyaai

Aakkidavae Erangum Erangum 

எங்கள் ஆத்ம நேசரே  - Engal Aathma Neasarae


Post a Comment (0)
Previous Post Next Post