பாவிக்காய் மரித்த இயேசு -Paavikkaai Mariththa Yeasu

 பாவிக்காய் மரித்த இயேசு -Paavikkaai Mariththa Yeasu


1. பாவிக்காய் மரித்த இயேசு

மேகமீதிறங்குவார்;

கோடித் தூதர் அவரோடு

வந்து ஆரவாரிப்பார்

அல்லேலூயா

கர்த்தர் பூமி ஆளுவார்.


2. தூய வெண் சிங்காசனத்தில்

வீற்று வெளிப்படுவார்

துன்புறுத்திச் சிலுவையில்

கொன்றோர் இயேசுவைக் காண்பார்

திகிலோடு

மேசியா என்றறிவார்.


3. அவர் தேகம் காயத்தோடு

அன்று காணப்படுமே

பக்தர்கள் மகிழ்ச்சியோடு

நோக்குவார்கள் அப்போதே

அவர் காயம்

தரும் நித்திய ரட்சிப்பை.


4. உம்மை நித்திய ராஜனாக

மாந்தர் போற்றச் செய்திடும்

ராஜரீகத்தை அன்பாக

தாங்கி செங்கோல் செலுத்தும்

அல்லேலூயா

வல்ல வேந்தே, வந்திடும்.


1.Paavikkaai Mariththa Yeasu

Meagameethirankuvaar;

Koodi Thoothar Avarodu

Vanthu aaravaarippaar;

Alleluya

karthar Boomi Aazhluvaar.


2.Thooya ven sinkaasanathil

Veettru vealipaduvaar;

Thunpuruththi siluvaiyil

Kontror Yesuvai kaanpaar;

Thikilodu

Meassiya Entrarivaar.


3.Avar Theagam kaayathodu

Antru kaanapadumae;

Baktharkal Magilchiyodu

Nokkuvaarkal Appothae;

Avar kaayam

Tharum Niththiya Ratchippai.


4.Ummai Niththiya Raajanaaga

Maanthar Pottra Seithidum

Raaja Reegaththai Sealuththum

Alleluya

Valla Veanthae Vanthidum


பாவிக்காய் மரித்த இயேசு -Paavikkaai Mariththa Yeasu


Post a Comment (0)
Previous Post Next Post