இப்போது நேச நாதா - Ippothu Neasa Naatha

இப்போது நேச நாதா - Ippothu Neasa Naatha


1. இப்போது, நேச நாதா, தலை சாய்த்து

தெளிந்த அறிவோடு ஆவியை

ஒப்புவித்தீர் பிதாவின் கரமீது

பொங்கு நெஞ்சம் மூச்சற்றொடுங்கிற்றே.


2. சாமட்டும் சாந்தமாய் என் துக்கப் பாரம்

நீர் தாங்கி, மனதார மரித்தீர்;

உம் சாவில் பெலன் உற்றே, ஆவியையும்

அமைதலாய்த் தந்தைக் கொப்புவித்தீர்.


3. நல் மீட்பரே, சாவிருள் என்னைச் சூழ்ந்து,

மரண அவஸ்தை உண்டாகையில்,

தொய்யும் ஆவியில் சமாதானம் ஈந்து,

ஒளி உண்டாக்கும் அச்சராவினில்.


4. நான் மாளும்போதும் சிலுவையைக் காட்டும்;

என் தலையை உம் மார்பில் அணைத்தே

என் கடை மூச்சை அன்பாய் ஏற்றுக்கொள்ளும்;

அப்பால் உம் நித்திய ஓய்வு என்னதே




1.Ippothu Neasa Naatha Thalai Saaithu

Thealintha Arivodu Aaviyai

Oppuviththeer Pithaavin Kara Meethu

Pongu Nenjam Mootchattrodu Angittrae


2.Saamattum Saanthamaai En Thukka Paaram

Neer Thaangi Manathaara Mariththeer

Um Saavil Belan Uttrae Aaviyaiyum

Amaithalaai Thanthai Koppuviththeer


3.Nal Meetparae Saavirul Ennai Soolzhnthu

Marana Avasthai Undaakaiyil

Thoiyum Aaviyil Samaathaanam Eenthu

Ozhi Undakkum Atcharaavinil


4.Naan Maalum Pothum Siluvaiyai Kaattum

En Thalaiyai Um Maarbil Ananiththae

En kadai Mootchai Anbaai Yeattru Kollum

Appaal  Um Niththiya Ooiyu Ennathae 

 


இப்போது நேச நாதா - Ippothu Neasa Naatha

Post a Comment (0)
Previous Post Next Post