கர்த்தரின் பந்தியில் வா - Kartharin Panthiyil vaa

 கர்த்தரின் பந்தியில் வா -  Kartharin Panthiyil vaa


பல்லவி


கர்த்தரின் பந்தியில் வா,-சகோதரா

கர்த்தரின் பந்தியில் வா.


அனுபல்லவி


கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின

காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி,  - கர்த்தரின்


சரணங்கள்


1.ஜீவ அப்பம் அல்லோ?-கிறிஸ்துவின்

திருச் சரீரம் அல்லோ?

பாவ மனங் கல்லோ?-உனக்காய்ப்

பகிரப்பட்ட தல்லோ?

தேவ குமாரனின் ஜீவ அப்பத்தை நீ

தின்று அவருடன் என்றும் பிழைத்திட. - கர்த்தரின்


2.தேவ அன்பைப் பாரு;-கிறிஸ்துவின்

சீஷர் குறை தீரு;

பாவக் கேட்டைக் கூறு;-ராப்போசன

பந்திதனில் சேரு;

சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்

தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே. - கர்த்தரின்


3.அன்பின் விருந்தாமே;-கர்த்தருடன்

ஐக்யப் பந்தி யாமே;

துன்பம் துயர் போமே;-இருதயம்

சுத்த திடனாமே;

இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு

ஏது தாமதமும் இல்லாதிப்போதே வா. - கர்த்தரின்



Kartharin Panthiyil vaa Sakothara

Kartharin Panthiyil vaa 


Karthar Anbaai Sontha Raththathai Sinthina

Kaaranaththai Mana Pooranamaai Enni


1.Jeeva Appam Allo Kiristhuvin 

Thiru Sareeram Allo 

Paava Mangankallo - Unakkaai

Pagirapatta Thallo

Deva kumaaranin Jeeva Appaththai Nee

Thintru Avarudan Entrum Pilaithida


2.Deva Anbai Paaru kiristhuvin

Sheeshar Kurai Theeru

Paava Keattai Kooru Raapposana

Panthithanil Searu

Saavukkuriya Maa Paavamulla Logam

Thannil Manam Vaithu Anniyanin Aagaathae


3.Anbin Virunthaamae Karththarudan

Aikkiya Panthiyaamae

Thunbam Thuyar Pomae Irudhayam

Suththa Thidanaamae

Inbam Migum Deva Anbin Virunthukku

Yeathu Thaamathamum Illathippothae Vaa



கர்த்தரின் பந்தியில் வா -  Kartharin Panthiyil vaa


Post a Comment (0)
Previous Post Next Post