சபையாரே கூடிப்பாடி - Sabaiyorae KoodiPaadi

 சபையாரே கூடிப்பாடி - Sabaiyorae KoodiPaadi


1. சபையாரே கூடிப்பாடி

கர்த்தரை நாம் போற்றுவோம்

பூரிப்பாய் மகிழ் கொண்டாடி,

களிகூரக் கடவோம்

இந்நாள் கிறிஸ்து சாவை வென்று

எழுந்தார் ஆர்ப்பரிப்போம்.


2. சிலுவையில் ஜீவன் விட்டு

பின்பு கல்லறையிலே

தாழ்மையாக வைக்கப்பட்டு

மூன்றாம் நாள் எழுந்தாரே!

லோக மீட்பர், வல்லநாதர்

வெற்றிவேந்தர் ஆனாரே.


3. மீட்பரே, நீர் மாட்சியாக

சாவின் கூரை முறித்தீர்

நாங்கள் நீதிமான்களாக

பிதாமுன்னே நிற்கிறீர்

என்றென்றைக்கும் விண் மண்ணோரும்

உம்மை வாழ்த்தப் பெறுவீர்.


4. சாவின் ஜெயம் ஜெயமல்ல

தேகம் மண்ணாய்ப் போயினும்

எல்லாம் கீழ்ப்படுத்த வல்ல

கர்த்தராலே மீளவும்

ஜீவன் பெற்று, மேன்மை கொண்டு

மறு ரூபமாகிடும்.


1.Sabaiyorae KoodiPaadi

Karththarai Naam Pottruvom

Poorippaai Magil Kondaadi

Kalikoora Kadavom

Innaal Kiristhu Saavai Ventru

Elunthaar Aarpparippom


2.Siluvaiyil Jeevan Vittu

Pinbu Kallaraiyilae

Thaazhmaiyaaga Vaikkappattu

Moontraam Naal Elunthaarae

Loga Meetppar Valla Naathaar

Vettri Veandhar Aanaarae


3.Meetparae Neer Maatchiyaaga

Saavin Koorai Muriththeer

Naangal Neethimangalaaka

Pithaa Munnae Nirkireer

Entritraikkum Vin Mannorum

Ummai Vaalththa Pearuveer


4.Saavin Jeyam Jeyamalla

Theagam Mannaai Poyinum

Ellaam Keezhpaduththa Valla

Karththaraalae Meelavum

Jeevan Pettru Meanmai Kondu

Maru Roobamagidum சபையாரே கூடிப்பாடி - Sabaiyorae KoodiPaadi

Post a Comment (0)
Previous Post Next Post