சத்திய வேதத்தைத் தினம் - Saththiya Vedhathai Dhinam

 சத்திய வேதத்தைத் தினம் - Saththiya Vedhathai Dhinam


பல்லவி


சத்திய வேதத்தைத் தினம் தியானி,

சகல பேர்க்கும் அதபிமானி.


அனுபல்லவி


உத்தமஜீவிய வழி காட்டும், உயர்வானுலகில் உனைக்கூட்டும் - சத்திய


சரணங்கள்


1. வாலிபர் தமக்கூண் அதுவாகும்; வயோதியர்க்கும் அதுண வாகும்

பாலகர்க்கினிய பாலும் அதாம்; படிமீ தாத்மபசி தணிக்கும். - சத்திய


2. சத்துருப் பேயுடன் அமர்புரியும் தருணம் அது நல் ஆயுதமாம்;

புத்திரர் மித்திரரோடு மகிழும் பொழுதும் அதுநல் உறவாகும். - சத்திய


3. புலைமேவிய மானிட ரிதயம் புனிதம் பெறுதற்கதுமருந்தாம்;

நிலையா நரர்வாணாள் நிலைக்க நேயகாய கற்பம் அதாம் - சத்திய


4. கதியின் வழிகாணாதவர்கள் கண்ணுக்கரிய கலிக்கம் அது;

புதிய எருசாலேம்பதிக்குப் போகும் பயணத்துணையும் அது. - சத்திய


5. மாந்தர் ரக்ஷிப்படையும் வழி வழுத்தும் வேதவார்த்தை அது;

வேந்தர் அமைச்சர் முதலெவர்க்கும் விதித்த பிரமாணமும் அதுவே. - சத்திய



Saththiya Vedhathai Dhinam Thiyaani

Sagala Pearkkum Athabimaani


Uththama Jeeviya Vazhi Kaattum

Uyar Vaanulagil Unai Koottum


1.Vaalibar Thamakkoon Athuvaagum Vayothiyarkkum Athu Unavaagum

Paalarkkiniya paalum Athaam Paadimee Thathma pasi Thanikkum


2.Saththuru Peayudan Amar Puriyum Tharunam Athu Nal Aayuthamaam

Puththirar Miththirarodu Magilum Poluthum Athu Nal Uravaagum


3.Pulai Meaviya Maanida Rithayam Punitham Pearutharkathu Marunthaam

Nilaiyaa Nararvaanaal Nilaikka Neayakaaya Karpam Athaam


4.Kathiyin Vazhi Kaanaathavarkal Kannukkariya Kalikkam Athu

Puthiya Erusaaleam Pathikku Pogum Payanaththunaiyum Athu


5.Maanthar Ratchippadaiyum Vazhi Vazhuththum Veadha Vaarththai Athu

Veandhar Amaichar Muthaleavarkkum Vithiththa Piramaanamum Athuvae 


சத்திய வேதத்தைத் தினம் - Saththiya Vedhathai Dhinam


Post a Comment (0)
Previous Post Next Post