உருகாயோ நெஞ்சமே - Urugayo Nenjamae

 உருகாயோ நெஞ்சமே - Urugayo Nenjamae


1.உருகாயோ நெஞ்சமே

குருசினில்  அந்தோ பார்!

கரங் கால்கள்  ஆணி யேறித்

திரு மேனி நையுதே!


2.மன்னுயிர்க்காய்த்  தன்னுயிரை

மாய்க்க வந்த மன்னவனாம்,

இந்நிலமெல் லாம் புரக்க

ஈன குரு சேறினார்.


3.தாக மிஞ்சி  நாவறண்டு

தங்க மேனி மங்குதே.

ஏகபரன்  கண்ணயர்ந்து

எத்தனையாய் ஏங்குறார்.


4.மூவுலகைத் தாங்கும் தேவன்

மூன்றாணி  தாங்கிடவோ?

சாவு வேளை வந்த போது

சிலுவையில் தொங்கினார்.


5.வல்ல பேயை வெல்ல வானம்

விட்டு வந்த தெய்வம் பாராய்

புல்லர் இதோ நன்றி கெட்டுப்

புறம் பாக்கினார் அன்றோ?



1.Urugayo Nenjamae

Kurusinil Antho Paar

Karang Kaalkal Aani Yeari

Thiru Meani Naiyuthae


2.Mannuyirkaai Thannuirai

Maaikka Vantha Mannavanaam

Innelamel Laam Purakka

Eena guru searinaar


3.Thaaga Minji Naavarandu

Thanga Meani Manguthae

Yeagaparan Kannayarnnthu

Eththanaiyaai Yeanguraar


4.Moovulagai Thaangum Devan

Moonreaani Thaangidavo

Saavu Vealai Vantha Pothu

Siluvaiyil Thonginaar


5.Valla Peayai Vella Vaanam

Vittu Vantha Deivam Paaraai

Pullar Itho Nantri Keattu

Puram Paakkinaar Antro


உருகாயோ நெஞ்சமே - Urugayo Nenjamae



Post a Comment (0)
Previous Post Next Post