பக்தருடன் பாடுவேன் - Baktharudan Paaduvaen

 பக்தருடன் பாடுவேன் - Baktharudan Paaduvaen


பல்லவி


பக்தருடன் பாடுவேன் -பரம சபை

முக்தர் குழாம் கூடுவேன்


அனுபல்லவி


அன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில்

இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் - பக்த


சரணங்கள்


1.அன்பு அழியாதல்லவோ அவ்வண்ணமே

அன்பர் என் இன்பர்களும் ,

பொன்னடிப் பூமானின் புத்துயிர் பெற்றதால்

என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய் .- பக்த


2.இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க்கு

அகமும் ஆண்டவன் அடியே ,

சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும்,

இகலில்லா ரட்சகன் இன்பப் பொற்பாதமே .- பக்த


3.தாயின் தயவுடையதாய்த் தமியன் நின்

சேயன் கண் மூடுகையில் ,

பாயொளிப் பசும் பொன்னே, பக்தர் சிந்தாமணி ,

தூயா ,திருப்பாதத் தரிசனம் தந்தருள்- பக்த



Baktharudan Paaduvaen - Paramasabai

Muktharkulaam kooduvaen


Anbaal Annaikkum Arulnaathan Maarbinil

Inbam Nukarnthilaippaaruvor kooda Naan 


1.Anpu Aliyaathallo Avvannnamae

Anbar En Inbarkalum,

Ponandi Poomaanin Puththuyir Pettathaal

Ennudan Thanguvaar Ennooli kaalamaai 


2.Egamum Paramum Ontrae Evvadiyaarkku

Akagum Aanndavan Adiyae,

Sukamum Narselvamum Suttamum Uttamum,

Egalillaa Ratchakan Inba Porpaathamae


3.Thaayin Thayavudaiyathaai Thamiyan Nin

Seayan kann Moodukaiyil,

Paayoli Pasumponnae, Bakthar Sinthaamanni,

Thooyaa, Thiruppaatha Tharisanam Thantharul



பக்தருடன் பாடுவேன் - Baktharudan Paaduvaen


Post a Comment (0)
Previous Post Next Post