ஐயையோ நான் என்ன செய்வேன் – Aiyyaiyo Naan Enna Seivean

 ஐயையோ நான் என்ன செய்வேன் - Aiyyaiyo Naan Enna Seivean


ஐயையோ நான் என்ன செய்வேன்

அங்கம் பதைத்தேங்குதையா


அனுபல்லவி


மெய்யாய் எந்தன் பாவத்தாலே

மேசியா வதைக்குள்ளானார்



1. முண்முடி சிரசில் வைத்து

மூங்கில் தடியாலடித்த

சண்டாளர் செய்கையை எண்ண

சகிக்குதில்லை எந்தனுள்ளம் – ஐயையோ


2. பெற்ற தாயார் அலறி வீழ

பிரிய சீஷர் பதறி ஓட

செற்றலர் திரண்டு சூழ

தேவே, இந்தக் கஷ்டம் ஏனோ? – ஐயையோ


3. கால் தளர்ந்து போச்சுதையா

கைகள் சோர்ந்து வீழுதையா

சேல்விழிகள் மங்குதையா

தேவே எந்தன் பாவமல்லோ – ஐயையோ


4. நா வறண்டு நடை தள்ளாட

நண்பர் கண்டு கதறி வாட

ஜீவ இம்சையே மேலாட

தேவே கொல்கதாவில் நீட – ஐயையோ


5. சிலுவை தன்னைப் பாட்டிலிட்டு

தேவே உம்மை மேல் கிடத்தி

வலுவாய் கை கால்களை இழுத்து

மாட்டினாரோ ஆணியிட்டு – ஐயையோ


6. துடிக்குதே உன் அங்கமெல்லாம்

சோர்வடைய உந்தனாவி

வெடிக்குதுந்தன் இடது விலா,

விரனீட்டியாலே குத்த – ஐயையோ


7. இந்தக் கஷ்டம் நீர் சகிக்க

வந்ததெந்தன் பாவமல்லால்

உந்தன் குற்றம் யாதுமில்லை

எந்தையே நீரே என் தஞ்சம் – ஐயையோ


Aiyyaiyo Naan Enna Seivean

Angum Pathaithu enguthaiyo


Meiyaai Enthat Paavathalae

Mesiya vathaikullaanaar


Munmudi Sirasil vaithu

Moongil Thadiyaaladitha

Sandaalar Seigaiyai Enna

Sakikuthillai Enthanullam


Pettra Thayaar Alari Veezha

Piriya Seeshar pathari Oda

Settralar Thirandu Soozha

Deve, Intha Kastam Yeno


Kaal Thalarnthu Pochuthaiya

Kaikal Sornthu Veezhuthaiya

Selvizhikal Manguthaiya

Deve, Enthan Paavamallavo


Na varandu nadai Thallada

Nanbar Kandu Kathari Vaada

Jeeva Imsaiye Mealada

Deve, Golghathavil Needa 


Siluvai Thannai pattilittu

Deve,Ummai Meal Kidaththi

Valuvaai kai kaalkalai Eluthu

Mattinaaro Aaniyittu


Thudukkuthe Un Angamellam

Soorvadaiya Unthanaavi

Vedikkuthu unthan Idathu vila

Veraneettiyaalae kuththa


Intha Kastam Neer Sakikka

Vanthathen paavamallaal

Unthan Kuttram yaathumillai

Enthaiyae Neere En Thanjam



Post a Comment (0)
Previous Post Next Post