தேவாதி தேவன் மனுவானாரே - Devathi Devan Manuvaanarae

 தேவாதி தேவன் மனுவானாரே - Devathi Devan Manuvaanarae


பல்லவி


தேவாதி தேவன் தேவாதி தேவன்

மனுவானாரே - உன்னத


சரணங்கள்


1. பரலோகச் செல்வத்தை

பார்த்திபன் வெறுத்து

நரரூபமானாரே

பாவி உன்னை மீட்க! - தேவாதி


2. திருமறை வாக்குகள்

பரன் நிறைவேற்றிட

சிறுமையாய் உதித்த

கிருபைச் சுதனான - தேவாதி


3. மன்னுயிர்க்காகத்

தன்னுயிரைத்தர

தானாக நேசத்தால்

வானாசனம் ஆகிவிட்ட - தேவாதி


4. தேவ துரோகிகள்

வேதனையை நீக்கி

பேதைகள் கோபிகள்

வேதத்தைக் கைக்கொள்ள - தேவாதி


5. மார்க்க வைராக்கியரே

மூர்க்க வெறியரே

பார்த்திபன் நேசத்தை

பார்த்தால் திகைப்பீரே - தேவாதி


6. இந்த நல்வேளையில்

வந்துனை மீட்பர்க்கு

தந்தால் உன்னை இவர்

சொந்தமாய் ஏற்பார் காண் - தேவாதி


Devathi Devan Devathi Devan

Manuvaanarae - Unnatha


Paraloga selvaththai

Paarthipan veruththu

Naru roobamaanaarae

Paavi Unnai Meetkka


Thirumarai Vaakkugal

Paran Niraivettida

Sirumaiyaai Uthitha

Kirubai suthanaana


Mannuyirkaaga

Thannuyiraithara

Thaanaga Neasaththaal

Vaanoosanam Aaagivitta


Deva thorogikal

vedhanaiyai Neekki

Peathaikal gobigal

Vedhathai kaikolla


Maarkka vairakkiyarae

Moorkka veriyarae

paarthipan neasathai

Paarthaal thikaipeerae


Intha Nalvelaiyil

Vanthunai Meetparkku

Thanthaal Unnai Evar

Sonthammai Yearpaar Kaan



Post a Comment (0)
Previous Post Next Post