பாவம் போக்க வகை பாரும் - Paavam Pokka Vagai Paarum

 பாவம் போக்க வகை பாரும் - Paavam Pokka Vagai Paarum 


பல்லவி


பாவம் போக்க வகை பாரும்; ஐயா

தாவி உன் மெய் மீட்பர் யாரென்று தேடும்


சரணங்கள்


1. ஆவி இருக்கின்ற கூடு என்றும்

அழியாதிருக்கும் மேல் வீட்டையே நாடு - பாவம்


2. வாழ்வைச் சதமென்றிராதே, கெட்ட

மாய்மாலக்காரர் வலையில் விழாதே - பாவம்


3. சாக்குபோக்கு நீ சொல்லாதே வீணாய்

வாக்கு வாதங்களால் மனதைத் தேற்றாதே - பாவம்


4. பாவத்தின் நோயை நானுணர்ந்து, தேவ

ஆவியால் இரட்சிப்பைக் கண்டுகொண்டேனே! - பாவம்


5. இரட்சிப்பை இப்போதே தேடும் இல்லால்

சிட்சிப்பார் இயேசும்மை பேய்க்கணத்தோடு - பாவம்


6. நீயுமிவ்வாதைக்குள்ளானாயோ? ஐயா

தீய நசலிதைத் தீர்ப்பாரே இயேசு - பாவம்


Paavam Pokka Vagai Paarum; Aiyya

Thaavi Un Mei Meetpar Yaarentru Theadum


Aavi irukintra kooda Entrum

Azhiyathirukkum Mael Veettaiyae Naadu - Paavam 


Vaazhvai sathamentriraathae, Ketta

Maai maalakaarar valayil vizhathae - Paavam


Saakku Pokku Nee Sollaathae Veenaai

Vaakku Vaathangalaal Manathai Thettrathae- Paavam


Paavaththin Nooyai Naanunarnthu Deva

Aaviyaal Ratchippai Kandu kondaenae - Paavam


Ratchippai Ippothae Theadum Illaal

Sitchippaar Yesuummai Paei kanaththodu - Paavam


Neeyum Vaathaikullaanaayo? Aiyya

Theeya Nasaliththai Theerppaarae Yesu - Paavam



Post a Comment (0)
Previous Post Next Post