இரட்சண்ய வீரரே - Ratchanya Veerarae

 இரட்சண்ய வீரரே - Ratchanya Veerarae 


பல்லவி


இரட்சண்ய வீரரே - இரட்சண்ய வீரரே

இரட்சண்ய சேனை வீரரே - அல்லேலூயா

இரட்சகரைப் போற்றுவோம்

இன்பக் கீதம் பாடுவோம்

நூற்றாண்டு கொண்டாடுவோம்


சரணங்கள்


1.மேய்ப்பனில்லா ஆடுப்போல் - முன்னோர்

வழிதப்பிக் கெட்டலைந்தார்

அன்பின் குரலாலே - அந்த நாளிலழைத்து

அன்பு காட்டி - அன்னமூட்டி

ஆதரித்தாரே


2. நூற்றாண்டுகளுக்கு முன்னே - நம்

முன்னோர்களனுபவித்த

பொல்லாக் கொடுமையை - போராடிப் போக்கிட

சேனை தளகர்த்தனாக

பூத் டக்கர் வந்தார்


3.பேய் பிசாசை தெய்வமென்று - நம்பி

ஆடு கோழி பலி செலுத்தி

மதியைக் கெடுத்திடும் மதுபானமருந்தி

சேற்றிலே புரண்டவரை

தூக்கி இரட்சித்தார்


4.எண்ணெழுத் தறியாதோர்களின்

கண்களைத் திறக்க வந்தார்

ஆடை அனைவருக்கும், அன்புடனுடுத்தி

ஊணுடை, உறைவிடம்

தந்திட வந்தார்



Ratchanya Veerarae Ratchanya Veerarae 

Ratchanya Seanai Veerarae Alleluya

Ratchakarai Pottruvom

Inba Geetham Paaduvom

Noottraandu Kondaaduvom


1.Meippanilla Aadupoal Munnoor

Vazhi Thappi Keattalainthaar

Anbin Kuralaalae Antha Naalilainthu

Anbu Kaatti Anna Mootti

Aathariththaarae


2.Noottraandukalukku Munnae Nam

Munnorkalunubaviththa 

Pollaa Kodumaiyai Poraadi Pokkida

Seanai Thalakarththanaaga

Booth Tucker Vanthaar 


3.Peai Pisaasai Theivamentru Nambi

Aadu kozhi Pali sealuththi

Mathiyai Keaduththidum Mathubaanamarunthi

Seattrilae Purandavarai

Thookki Ratchiththaar


4.Enneluth Thariyaathoorkalin

Kankalai Thirakka Vanthaar

Aadaiyanaivarkkum Anbudanuduththi

Voonudai Uraividam

Thanthida Vanthaar 

இரட்சண்ய வீரரே - Ratchanya Veerarae


Post a Comment (0)
Previous Post Next Post