சேர்வதெப்போது பாவி - Searvatheppothu Paavi

 சேர்வதெப்போது பாவி - Searvatheppothu Paavi


பல்லவி


சேர்வதெப்போது பாவி - சொர்க்க இன்பத்தை

சேர்வதெப்போது பாவி - மோட்ச இன்பத்தை

சேர்வதெப்போது பாவி?


சரணங்கள்


1. ஞாலத்தில் வந்த குருநாதனைப் பணியாமல்

காலமிருக்குதென்று கவலையற்றிருந்தால் - சேர்


2. அக்ஷயன் இயேசுவின் பக்ஷமதை மறந்து

இரக்ஷையைத் தள்ளி துர் இச்சையில் திரிந்தால் - சேர்


3. பாவப் பாரஞ் சுமந்து பரிதவிக்கும் பாவியைக்

கூவி அழைத்து நிற்கும் காவலனை விட்டால் - சேர்


4. திருக்கு முறுக்குப் பண்ணும் செருக்குள்ள நெஞ்சத்தைதான்

உருக்கமுள்ள இயேசுவின் திருக்கரம் வையாவிடில் - சேர்


5. உள்ளத்தைத் திறந்து நீ உண்மையை அறியாமல்

கள்ளத்தனம் பண்ணிக் காலத்தைக் கழித்தால் - சேர்


6. இரட்சகர் வந்துன்னை இரட்சிக்க நிற்கும்போது

கட்சி பண்ணிக்கொண்டு துஷ்டனாக அலைந்தால் - சேர்


searvatheppothu paavi sorkka Inbaththai

searvatheppothu paavi Motcha Inbaththai

searvatheppothu paavi


1.Gnalaththil vantha Gurunaathanai paniyaamal

Kaalamirukkuthentru kavalaiyattirunthaal -sear


2.Atchayan yesuvin patchamathai maranthu

Ratchaiyai Thalli thooe itchaiyil thirinthaal-sear


3.Paava paaranj sumanthu parithavikkum paaviyai

Koovi Azhaithu Nirkkum Kavalanai vittaal -sear


4.Thirukku Murukku Pannum searukkulla Nenjaththaithaan

Urukkamulla yesuvin thirukaram vaiyavidil -sear


5.Ullaththai thiranthi nee unmaiyai ariyaamal

kallathanam panni kaalaththai kazhithaal-sear


6.Ratchakar vanthunnai ratchikka Nirkkum pothu

Katchi pannikondu thustanaaka alainthaal -sear

சேர்வதெப்போது பாவி - Searvatheppothu Paavi


Post a Comment (0)
Previous Post Next Post