யேசுவுக்கு நமது தேசத்தை - Yesuvukku Namathu Desathai

 யேசுவுக்கு நமது தேசத்தை - Yesuvukku Namathu Desathai


பல்லவி


யேசுவுக்கு நமது தேசத்தைச் சொந்தமாக்கப்

பாசமாய் முயல்வோம் தாசரே


அனுபல்லவி


தேசொளி ஞாலமெங்கும் வீசும் யேசுவில் விசு

வாசம் வைத்தன் பின் சுவிசேஷத்தை ஏந்தி - யேசு


சரணங்கள்


1.கங்காநதி துவக்கி கன்னியாகுமரி வரை

எங்குமே யேசுராசா ஆளவே அவர்

சிங்காரக் கொடி மேலிலங்கக் குடிகளெல்லாம்

மங்காச் சந்தோஷ முற்று வாழவே மன்னன் - யேசு


2.விந்தை பூர்விக நூல்கள் தத்துவ ஞானத்துக்கு

மெத்தப் பேர்போன இந்திய தேசமாம் - இதில்

சத்தயமாக வந்த நித்யர் யேசுவின் பரி

சுத்த பரம ஞானம் ஜோதியாய்த் தோன்ற - யேசு


3.தீய மாமூல் வழக்கம் ஓய வீண்பக்தி நீங்க

மாயக் கோட்பாடு முற்றும் மாறவே யேசு

தூயன் சத்தியவேத ஞாயவிதிகள் உள்ளம்

பாயநம் நாட்டார் குணமாகவே வல்ல - யேசு


4.நம்மை வெறுத்து யேசுநாதனுக் கொப்புவித்துச்

செம்மையுடன் உழைத்துச் சேவிப்போம் அவர்க்

குண்மை பாராட்டி நமக்குள்ள யாவும் படைத்து

நம்மாலியன்றளவு முயல்வோமே என்றும் - யேசு



Yesuvukku Namathu Desathai Sonthamaakka

Paasamaal Muyalvom Thaasarae


Deasoli Gnaalamengum Veesum yeasuvil Visu

Vaasam Vaiththan Pin Suvisheshaththai Yeanthi


1.Gangaa Nathi Thuvakki Kanniyakumari Varai

Engumae Yeasu Raasa Aalvae Avar

Singaara Kodi Mealilanga Kudikalellaam

Mangaa Sanshosa Muttru Vaazhvae Mannan


2.Vinthai Poorviga Neelgal Thaththuva Gnanaththukku

Meththa Pear Pona Inthiya Deasamaam Ithil

Sathyamaaga Vantha Nithyar Yeasuvin Pari

Suththa Param Gnaanam Jothiyaai Thontra


3.Theeya Maamul Valakkam Ooya Vin Bakthi Neenga

Maaya Kotpaadu Muttrum Maaravae Yeasu

Thooyan Saththiya Vedha Gnaaya Vithikal Ullam

Paaya Nam Naattaar Gunamaakavae Valla


4.Nammai Vearuththu Yeasu Naathanuku Oppuviththu

Semmaiyudan Ulaiththu Seavippom Avarku

Unmai Paaraatti Namakkulla Yaavum Padaiththu

Naamaliyantralauv Muyalvomae Entrum

யேசுவுக்கு நமது தேசத்தை - Yesuvukku Namathu Desathai


Post a Comment (0)
Previous Post Next Post