உன்னதமான தேவனை ஸ்தோத்தரிப்பது - Unnathamana Devanai Sthostharipathu

 உன்னதமான தேவனை ஸ்தோத்தரிப்பது - Unnathamana Devanai Sthostharipathu


உன்னதமான தேவனை ஸ்தோத்தரிப்பது

இயேசு தந்த பாக்கியம் இது (2)

இயேசு தந்த இரட்சிப்பை அனுபவிப்பதும்

பிதா தந்த சிலாக்கியம் இது (2)


1. மோட்ச வீட்டில் இயேசுவோடு இருக்கப் போவதை

நினைத்துப் பார்த்தால் உள்ளம் மகிழுதே (2)

சொர்க்க வீட்டின் மகிமையை நான் சுற்றிப் பார்க்கையில்

பரவசத்தால் துள்ளி மகிழுவேன் (2)


கண்ணீரில்லை துக்கமில்லை மரணம் இல்லையே

வருத்தமில்லை பசியுமில்லை தாகம் இல்லையே – அங்கே (2)


2. ஜீவ புத்தகத்தில் என் பெயர் எழுதப்பட்டதும்

அவர் கிருபையாலே அருளப்பட்டது (2)

பாதாளத்தின் வல்லமைக்கு விலக்கி மீட்டதும்

இயேசு இரத்தத்தாலே எனக்கு கிடைத்தது (2)


3. நீதிமான்கள் கூட்டத்தில் நானும் சேர்வதால்

நித்தியமாய் மகிழ்ச்சி பெருகுமே (2)

அவர் சித்தப்படி நானும் இங்கே வாழ்ந்து செல்வதால்

பரலோகம் என்னை வரவேற்குமே (2)


Unnathamana Devanai Sthostharipathu song lyrics in english


Unnathamana Devanai Sthostharipathu

Yesu Thantha bakkiyam ithu -2

Yesu Thantha Ratchippai Anupavippathum

Pitha Thantha Silakkiyam Ithu -2


1.Motcha Veettil Yesuvodu Irukka povathai

Ninaithu paarthaal Ullam Magiluthae -2

Sorkka Veettin Magimaiyai Naan Suttri Paarkkaiyil

Paravasathaal Thulli Magiluvean -2


Kanneerillai Thukkamillai Maranam Illaiyae

Varuththamillai Pasiyumillai Thaagam Illaiyae - Angae -2


2.Jeeva Puththakththil En Peayaer Eluthapattathum

Avar Kirubaiyalae Arulapattathu-2

Paathalaththin Vallamaikku Vilakki Meettathum

Yesu Rathththalae Enakku Kidaithathu -2


3.Neethimaangal Koottathil Naanum Searvathaal

Niththiyamaai Mgilchi perugumae -2

Avar siththapadi Naanum Ingae Vaalnthu Selvathaal

Paralogam Ennai varavearkkumae -2 Post a Comment (0)
Previous Post Next Post