உலகையோர் நிலையென்றெண்ணாதே - Ulagaiyor Nilai yentrennaathae

 உலகையோர் நிலையென்றெண்ணாதே - Ulagaiyor Nilai yentrennaathae 


பல்லவி


உலகையோர் நிலையென்றெண்ணாதே ஷணம்

ஒழிந்து போம் உன்னோடோரடியும் வராதே!


அனுபல்லவி


பலமாகப் பொக்கிஷம் பரத்திலே தேடு

பத்திரமாயங்கு இருக்குமே நீடு


சரணங்கள்


1. நிலையாது செல்வம் எந்நாளும் - அவை

நீர்க் குமிழ்கள் போல நிமிஷத்தில் நையும்

உலையில் மெழுகுபோல் உருகுமே மெய்யும்

உந்தனின் ஜீவனைப் பிரிக்குமே வீயும் - உல


2. தீரம் புகழ் கீர்த்தி நாசம் - மற்றும்

சேயர், மனைவி சிநேகிதர் வேஷம்;

தாரணி முற்றுமே தவிர்த்திடல் மோசம்;

சார்ந்திடில் ஆன்மாவுக்கென்றுமே தோஷம் - உல


3. வானத்தின் கீழ் யாவும் பண்டு - சாலமோன்

மாயை என்றுரைத்ததை மறவாதே கண்டு;

இதய வுடைவோடு இயேசுவை அண்டு

இன்பலோக நித்திய பேரின்பம் உண்டு! - உல


Ulagaiyor Nilai yentrennaathae shanam

Ozhinthu Poom Unnodoradiyum Varaathae


Balamaga pokkisham paraththilae thedu

Paththieamaayangu Irukkumae Needu


Nilaiyaathu Selvam Ennaalum - Avai

Neer kumilgal pola nimishaththil Naium

Ulaiyil Mezhugu pol urugumae meiyyum

Unthaninin Jeevanai pirikkumae veeyum 


Theera Puzhal keerthi naasam- Mattrum

Seayar manaivi sineakithar veasham

Thaarani muttrumae thavirthidal mosam

saarnthidil Aaanmauvkentrumae Thosham


Vaanaththin Keezh Yaavum pandu - Salamon

Maayai Entruraithathai Maravathae Kandu

Idhaya uvdaivodu Yesuvai Andu

Inbaloga niththiya pearinbam undu




Post a Comment (0)
Previous Post Next Post