பாவ சஞ்சலத்தை நீக்க - Paava Sanjalaththai Neekka

 பாவ சஞ்சலத்தை நீக்க - Paava Sanjalaththai Neekka


1. பாவ சஞ்சலத்தை நீக்க

பிராண சிநேகித னுண்டே

பாவப் பாரம் தீர்ந்து போக

மீட்பர் பாதம் தஞ்சமே!

சால துக்க துன்பத்தாலே,

நெஞ்சம் நொந்து சோருங்கால்,

துன்பம் இன்பமாக மாறும்

ஊக்கமான ஜெபத்தால்!


2. கஷ்ட நஷ்ட முண்டானாலும்

இயேசுவண்டை சேருவோம்;

மோச நாசம் நேரிட்டாலும்

ஜெபத்தால் சமீபிப்போம்;

நோக்குவாரே நெஞ்சின் நோவை,

பெலவீனம் தாங்குவார்;

நீக்குவாரே மனச் சோர்வை,

தீய குணம் மாற்றுவார்


3. பெலவீனமான போதும்

கிருபாசனமுண்டே,

இன ஜனம் சாகும்போதும்

புகலிடம் இதுவே;

ஒப்பில்லாத பிராண நேசா;

உம்மை நம்பி நேசிப்போம்;

அளவற்ற அருள் நாதா!



1.Paava Sanjalaththai Neekka

Piraana Sineakitha nundae

Paava Paaram Theerththu Poga

Meetppar Paatham Thanjamae

Saala Thukka Thunbaththaalae

Nenjam Nonthu Soorunkaal

Thunbam Inbamaaga Maarum

Ookkmaana Jebaththaal


2.Kasta Nasta Mundaanaalum

Yeasuvandai Searuvom

Mosa Naasam Nearittaalum

Jebaththaal Sameepipom

Nokkuvaarae Nenjin Noovai

Belaveenam Thaanguvaar

Neekkuvaarae Mana Soorvai

Theeya Gunam Maattruvaar


3.Belaveenamaana Pothum

Kirubaasanamundae

Ena Janam Saagum Pothum

Pugalidam Ithuvae

Oppillaatha Piraana Neasaa

Ummai Nambi Neasippom

Alavattra Arul Naathaa

பாவ சஞ்சலத்தை நீக்க - Paava Sanjalaththai Neekka


Post a Comment (0)
Previous Post Next Post